90% உறுதியான ஏகே 62.. பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித் படக்குழு

ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதாவது கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் ஒரே நாளில் வெளியானது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் துணிவு படம் தான் அதிக வசூல் செய்தது.

மேலும் வாரிசு படம் வசூலில் சற்று மந்தமாக இருந்தாலும் விஜய் தளபதி 67 படத்தின் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். ஏனென்றால் லோகேஷ், விஜய் கூட்டணி என்றால் தாறுமாறாக இருக்கும். இப்படம் தீபாவளி ரிலீஸுக்கு தயாராவதால் இதற்கு போட்டியாக விக்னேஷ் சிவனை இறக்க அஜித் தயக்கம் காட்டி உள்ளார்.

Also Read : கந்தலாகி கிடக்கும் ஏகே 62.. ரணகளத்திலும் கிளுகிளுப்புடன் போஸ் கொடுத்த அஜித் லேட்டஸ்ட் லுக்

ஆகையால் இப்போது ஏகே 62 பட வாய்ப்பு விக்னேஷ் சிவன் கையில் இருந்து இயக்குனர் மகிழ்திருமேனி கைக்கு சென்றுள்ளது. அருண் விஜய்க்கு தடம் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை மகிழ் திருமேனி கொடுத்துள்ளார். அஜித்துக்கு என்றால் வேற லெவலில் சம்பவம் செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகையால் கிட்டத்தட்ட 90% ஏகே 62 படத்தை மகிழ்த்திருமேனி தான் இயக்குகிறார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் லைக்கா இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. மேலும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஏகே 62 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக உள்ளது.

Also Read : 200 கோடி வசூலுக்கு முட்டி மோதும் துணிவு.. இதுவரை செய்யாத சாதனையை செய்து காட்டிய அஜித்

ஏற்கனவே ஏகே 62 படத்தில் அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டது. இப்போது இயக்குனர் மாற்றப்பட்டுள்ளதால் தடம் படத்தின் இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏகே 62 படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி அஜித் விக்னேஷ் சிவனையும் கைவிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மகிழ்திருமேனியுடன் ஏகே 62 படத்தை முடித்த கையோடு ஏகே 63 படத்தில் விக்னேஷ் சிவனுடன் அஜித் கைகோர்க்க உள்ளார். அந்தப் படத்தையும் லைக்கா தான் தயாரிக்க இருக்கிறது.

Also Read : AK-62, விக்னேஷ் சிவனை ஒதுக்க காரணமாய் இருந்த 5 விஷயங்கள்.. அஜித்தை இப்படி சங்கடப்படுத்தி இருக்காரே!