திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

சூரி, யோகி பாபு வரிசையில் ஹீரோவாக கால் பாதிக்கும் காமெடியன்.. 62 வயசாச்சு, ஆனாலும் நான் இப்ப ஹீரோ

காமெடியன்கள் ஹீரோவாக நடிப்பது என்பது தமிழ் சினிமாவில் வழக்கமாக நடக்கும் விஷயம் தான். 1000 திரைப்படங்களுக்கு மேல் காமெடியனாக நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் கூட சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். அது தவிர நிறைய படங்களில் இரண்டாவது கதாநாயகனாக சிவாஜி மற்றும் ஜெய் ஷங்கருடன் நடித்து இருக்கிறார்.

80களில் கோலிவுட் காமெடியில் கிங்காக இருந்த கவுண்டமணி கூட ஓரிரு படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். பல வருடங்களுக்கு மேல் காமெடி ஜாம்பவானாக இருந்த வடிவேலுவும் ஹீரோ ஆகிவிட்டார். அவரை தொடர்ந்து சந்தானம், யோகி பாபு, சூரி போன்ற காமெடி நடிகர்களும் இப்போது தங்களின் பங்குக்கு ஹீரோயிசம் காட்டி கொண்டிருக்கின்றனர்.

Also Read: தூக்கத்தைத் தொலைத்த சூரி.. வீட்டை விட்டு கிளம்பினாலே பசங்க கூட அசிங்கப்படுத்தறாங்க என புலம்பல்

இப்போது இந்த வரிசையில் 90ஸ் காமெடியன் சார்லியும் இணைந்திருக்கிறார். புகழ் பெற்ற காமெடி நடிகர் சார்லி சாப்ளினின் நினைவாக இவர் சினிமாவில் இந்த பெயரை வைத்துக் கொண்டார். இவர் இயக்குனர் பாலசந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். சார்லி 800 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். காமெடியனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

இப்போது சார்லி ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்திற்கு பைண்டர் என பெயரிடப்பட்டுள்ளது. அரபி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வினோத் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்க இருக்கிறார். சென்ட்ராயன் , அபிலாஷ், கோபிநாத், நடிகைகள் தாரணி மற்றும் பிராணா ஆகியோர் இந்த படத்தில் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைக்கிறார்.

Also Read: சூரிக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல காமெடி நடிகர்.. வெற்றி மாறனிடம் வேணாம் என மறுத்த பிரபலம்

அமெரிக்காவில், செய்யாத தப்புக்காக ஜெயிலில் இருப்பவர்களை கண்டுபிடித்து, அவர்களை நிரபராதி என வாதாடி விடுதலை பெற வைப்பதோடு அவர்களுக்கு இழப்பீடு வாங்கி தரும் நிறுவனத்தை பற்றிய கதை இது. கதைக்களம் மாற்றப்பட்டு தமிழ்நாட்டில் நடப்பது போல் எடுக்கப்படுகிறது. இரண்டு கட்ட படப்பிடிப்புகளாக சென்னை மற்றும் மதுரையில் நடைபெற இருக்கிறது.

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் சார்லி, வையாபுரி, தாமு கூட்டணியில் பல நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படி அமைந்து இருக்கும். நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் இவர் நடித்த கோபால் கேரக்டர் இன்றும் யாராலும் மறக்க முடியாது. வடிவேலு-சார்லி கூட்டணியில் ப்ரெண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சிகள் எப்போது பார்த்தாலும் வாய்விட்டு சிரிக்கும்படி இருக்கும்.

Also Read: சூரியின் இடத்தை பிடித்த பிரபல காமெடியன்.. வேறு வழி இல்லாமல் மாறிய ரூட்!

Trending News