Vijay: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா மியூசிக்கில் கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோட் அனைத்து திரையரங்கிலும் வெளியாக போகிறது.
இதனைத் தொடர்ந்து கடைசி படமாக 69வது படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எச். வினோத்துடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வெளியானது. அந்த வகையில் இப்படத்தை முடித்த கையுடன் சினிமாவிற்கு பிரேக் விட்டு அரசியல் சம்பந்தப்பட்ட வேலைகளை பார்த்து தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை நாடுவதற்கு பயணிக்க போகிறார்.
தளபதிக்கு வாழ்த்துக்கள் சொல்லிய விஜய்யின் கனவுக்கன்னி
இந்த சூழ்நிலையில் தளபதியை சந்தித்த 90s ஹீரோயின் குடும்பத்துடன் சேர்ந்து தளபதியுடன் போட்டோ எடுத்து இருக்கிறார். அந்த நடிகை யார் என்றால் 90களில் கொடி கட்டி பறந்த தொடையழகி ரம்பா. இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் அப்போதிலிருந்து இப்பொழுது வரை இருக்கிறார்கள்.
இப்பொழுது இவர் நடிக்கவில்லை என்றாலும், இவருடைய நடிப்புக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் விஜய்யின் கனவு கன்னியாக கூட நினைத்தேன் வந்தாய் படத்தில் இவர்களுடைய இரண்டு பேருடைய நடிப்பும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, என்றென்றும் காதல் போன்ற படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அதன்பிறகு ரம்பா கல்யாணம் ஆகி குழந்தை குட்டி என்று குடும்ப வாழ்க்கைக்கு முழுமையாக அர்ப்பணித்து விட்டார்.
அடுத்து படங்களில் நடிப்பதை மொத்தமாக விட்டுவிட்டார். இவருக்கு அழகான ரெண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண்மகன் என மூன்று குழந்தைகள் இருக்கிறது. தற்போது கிட்டத்தட்ட 24 வருடங்களுக்குப் பின் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்து புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
அதில் தளபதியுடன் ரம்பா செல்பி எடுக்கும் ஒரு புகைப்படம், ரம்பாவின் மகனை விஜய் தூக்கி வைத்திருக்கும் ஒரு போட்டோ, கணவருடன் சேர்ந்து விஜய்யுடன் இருக்கும் ரம்பா, விஜய்யுடன் நடிகை ரம்பா மகள் லாவண்யா, ஒட்டுமொத்த குடும்பத்துடன் சேர்ந்து விஜய் உடன் அசத்தலான போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
அத்துடன் பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்கள் நடிப்புக்கும், தமிழக வெற்றி கழகத்தின் அரசியலுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று ரம்பா பதிவிட்டு இருக்கிறார்.
விஜய்யின் கோட் படத்தின் அப்டேட்
- வாயை பிளக்க வைத்த GOAT டிஜிட்டல், தியேட்டர் உரிமை விற்பனை
- GOAT படத்தில் விஜயகாந்த் வருவாரா இல்லையா.?
- ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய GOAT டீம்