திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

20 வயதில் 5 சூப்பர் ஹிட் படங்கள்.. பக்கவாதத்திலிருந்து மீண்டு வந்து வெளுத்து வாங்கும் சூப்பர் ஸ்டாரின் தம்பி

Super Star Rajinikanth: சினிமா ஒரு சிலருக்கு தான் அதிர்ஷ்ட வாய்ப்பாக அமையும். முதல் படமே ஹிட், அடுத்தடுத்து வாய்ப்புகள் என வாரி வழங்கிய அவர்களை மிகப்பெரிய நடிகர்களாக மாற்றும். அப்படித்தான் இந்த ஹீரோவும் 20 வயதிலேயே முதல் படம். அதுவும் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படம். முதல் பட இயக்குனரை மணிரத்தினம் என ஆரம்பிக்கும் பொழுதே ஓஹோ என்று தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தவர்.

முதல் படம் வெற்றி அடைந்த பிறகு அடுத்தடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்தன இந்த ஹீரோவுக்கு. எல்லாமே மிகப்பெரிய வெற்றி படங்கள் தான். மேலும் தமிழ் சினிமாவின் பெண் ரசிகைகள் இவரை தூக்கி வைத்துக் கொண்டாடினர். இப்படி ஒரு மாப்பிள்ளை தான் வேண்டும் என்று 90களில் காலகட்டத்தில் பெண்கள் ஏங்கினர் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு வரவேற்பை பெற்றார் இந்த ஹீரோ.

Also Read:ரஜினி படத்தை காப்பி அடித்த சலார்.. 1000 கோடிக்கு அடி போடும் படம்

1991 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் திரைப்படமாக இருக்கும் தளபதி திரைப்படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்த அரவிந்த்சாமி தான் அந்த ஹீரோ. தம்பி கேரக்டராக இருந்தாலும் யார் இந்த பையன் என்று அத்தனை பேரும் அடையாளம் காணும் அளவுக்கு முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு மற்றும் தோற்றத்தினால் கவர்ந்திழுத்தார் இவர்.

அடுத்தடுத்து ரோஜா, பாம்பே, மின்சார கனவு என வெற்றி படங்களில் நடித்தார் அரவிந்த்சாமி. இன்றுவரை தமிழ்நாட்டில் ஒரு ஆண் அழகாக இருக்கிறான் என்றால் அவன் கண்டிப்பாக அரவிந்தசாமி மாதிரி தான் இருப்பான் என்ற அளவுக்கு இவருடைய முக வசீகரம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த அரவிந்த்சாமி திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.

Also Read:90களில் குஷ்புக்கு போட்டியாக இருந்த நடிகை.. ரஜினியுடன் மட்டும் ஜோடி போட முடியாமல் போன பரிதாபம்

அரவிந்த்சாமி பட வாய்ப்புகள் நன்றாக இருக்கும் பொழுதே வெளிநாடு போய்விட்டார், சொந்த தொழிலை பார்ப்பதற்காக போய்விட்டார் என்று இத்தனை காலமும் சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் இது எதுவுமே காரணம் இல்லையாம். அவர் தன்னுடைய 27 ஆவது வயதில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஐந்து வருடமாக பக்கவாதத்தில் படுத்திருந்திருக்கிறார். மேலும் உடல் எடையும் கூடி, தன்னுடைய அழகிய உருவத்தையும் இழந்து விட்டாராம்.

இதைப் போன்ற ஒரு பெரிய விபத்திலிருந்து மீண்டு மீண்டு எழுந்து வந்த அரவிந்த்சாமி க்கு 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் திரைப்படம் கிடைத்தது. இந்த ஒரு படத்திலேயே இத்தனை வருடத்தில் அவர் வாங்க வேண்டிய பெயர் புகழ் அத்தனையையும் மொத்தமாக வாங்கி விட்டார். இப்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் இவர், அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

Also Read:அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் ரஜினி.. பிரம்மாண்டமாக நடக்கப் போகும் ஆடியோ லான்ச்

Trending News