திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

40 வயதில் ரீ என்ட்ரி கொடுக்கும் 90ஸ் கனவுக்கன்னி.. அதுவும் நயன்தாராவுக்கு வில்லியாக

இன்றைய சினிமா காலகட்டத்தில் பல நடிகைகள் அறிமுகமாகி, வெற்றி நாயகிகளாக உலா வந்து கொண்டிருந்தாலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஃபேவரைட் நாயகிகள் என ஒரு சில நடிகைகளே இருக்கிறார்கள். அவர்கள் திருமணம் ஆகி சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இன்று வரை சினிமாவில் கம்பேக் கொடுத்து விட மாட்டார்களா, அவர்களை திரையில் பார்த்து விட மாட்டோமா, என பல 90ஸ் கிட்ஸ்கள் தவம் கிடக்கின்றனர். அதில் ஒரு நடிகை தான் தற்போது சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

பொதுவாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்னதான் வட இந்தியாவில் இருந்து பல நடிகைகள் கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டாலும், கேரள நடிகைகள் மீது எப்போதுமே ஒரு தனிப்பட்ட கிரஷ் இருக்கும். அப்படி நிறைய கேரள நடிகைகள் தமிழ் படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர் தான், இந்த கேரளத்து கனவு கன்னி நடிகை மீரா ஜாஸ்மின்.

Also Read:அவ மார்க்கெட்டை குறைக்காமல் ஓய மாட்டேன்.. சபதத்திற்காக திரிஷா எடுத்த விபரீத முடிவு

லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் ரொம்பவும் பயந்த பெண்ணாக, அமைதியாக வந்து போகும் மீரா ஜாஸ்மினை அப்படியே ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் சண்டக்கோழி படத்தில் அந்த பெண்ணா இது என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அதகளம் பண்ணி இருப்பார். துரு துருவென்று நடிக்கும் நடிப்பு, வசீகரமான முகம் என 90ஸ் கிட்ஸ்களை கிறங்கடித்தவர், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டவில்லை, இவருக்கு திருமணமும் ஆகிவிட்டது.

தமிழ் படம், விக்ரம் வேதா, மண்டேலா போன்ற படங்களை தயாரித்த ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் தன்னுடைய 23 வது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சித்தார்த், மாதவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு ‘டெஸ்ட்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் தான் மீரா ஜாஸ்மின் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

Also Read:நயன், விக்கி போல இல்ல.. ஷார்ட்டாக மகனுக்கு பெயர் வைத்த அட்லீ

ஏற்கனவே இந்த படத்தில் பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகி பயங்கர பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது மீரா ஜாஸ்மின் இணைந்து இருப்பது இந்த படத்திற்கு பெரிய பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே மாதவன் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து இருப்பதால் இருவரில் ஒருவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் யூகித்திருக்கிறார்கள், இந்நிலையில் மீரா ஜாஸ்மின் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் கண்டிப்பாக வில்லியாக நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:எட்டு டாப் ஹீரோக்களுடன் நடித்த ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.. 40 வயதில் நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்கும் நடிகை

Trending News