செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

90ஸ் பாடல்களை மீண்டும் தியேட்டரில் அலறவிட்ட 4 படங்கள்.. லோகேஷை ஃபாலோ பண்ணும் இயக்குனர்கள்

90s Movie Songs: 2K கிட்ஸ்கள் எல்லாம் இப்போது ஒரு பாடல் பிடித்து விட்டால் அதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு என்று பல ஆப்புகள் அவர்கள் கைகளில் இருக்கிறது. ஆனால் பிடித்த ஒரு பாடலை டிவி முன் உட்கார்ந்து எப்போதுடா அந்த பாட்டு வரும் என காத்திருந்தது 90ஸ் கிட்ஸ்களுக்கு தான் தெரியும். அப்படி 90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய ஒரு சில பாடல்களை இப்போது மீண்டும் ட்ரெண்டாக்கி வருகிறார்கள் ஒரு சில இயக்குனர்கள். இதை முதலில் ஆரம்பித்தவர் லோகேஷ் தான் அவரை பாலோ செய்து நிறைய இயக்குனர்கள் இப்போது இதை செய்து வருகிறார்கள்.

ஜூம்பலக்கா: டான்ஸ் மாஸ்டர் ராஜசுந்தரம் அவருடைய குழுவுடன் சேர்ந்து ஆடிய பாடல் தான் ஜூம்பலக்கா. இந்த பாட்டு 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் லிஸ்டாக இன்று வரை இருக்கிறது. இதை மீண்டும் கைதி படத்தின் மூலம் ட்ரெண்ட் ஆக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ஆச அதிகம் வச்சு: நடிகை ரோகினியின் அசத்தலான ஆட்டத்தில் எல்லோரும் ரசித்த பாடல் தான் ஆச அதிகம் வச்சு. இந்த பாட்டு ஏற்கனவே 96 படத்தில் பள்ளியில் கதாநாயகி பாடுவது போல் பயன்படுத்தப்பட்டது மீண்டும் கைதி படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு காட்சியில் இந்த பாட்டை வைத்திருப்பர்.

Also Read:மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

சக்கு சக்கு வத்திக்குச்சி: 90ஸ் கிட்ஸ்கள் பார்த்து அறண்ட வில்லன் மன்சூர் அலிகானை 2K கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குனர் லோகேஷ் கனகராஜை தான் சேரும். அதிலும் அவர் நடித்த சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலை விக்ரம் படத்தில் வைத்து அந்தப் பாட்டையும் சேர்த்து ட்ரெண்டாக்கி விட்டார்.

கண்ணோடு காண்பதெல்லாம்: ஜீன்ஸ் படத்தில் வரும் கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் இல்லாத பள்ளி விழாக்கள், திருவிழாக்கள் அப்போது இல்லை. அதிலும் இதில் கிராபிக்ஸ் ஆக வரும் ஐஸ்வர்யா ராய் பார்க்கவே அவ்வளவு ஆசையாக இருக்கும். இந்தப் பாட்டை ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறார் நெல்சன்.

Also Read:ஜவானை ஆட்டம் காண வைத்த மார்க் ஆண்டனி.. மிரட்டும் 3 நாள் வசூல் ரிப்போர்ட்

எங்கே என் புன்னகை: ஐஸ்வர்யா ராய் நடிப்பில் இந்தியில் ரிலீஸ் ஆன தாள் என்ற படம் தமிழில் தாளம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் வரும் எங்கே என் புன்னகை பாடல் அப்போதைய பெண்களின் தேசிய கீதம் ஆகவே இருந்தது. இந்தப் பாடலின் பிஜிஎம் மட்டுமே ஜெயிலர் படத்தில் வந்தது. இப்போது பாதி பேரின் ரிங்டோனாகவே இது மாறிவிட்டது.

அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி: சமீபத்தில் ரிலீசான மார்க் ஆண்டனி திரைப்படம் தியேட்டர்களை அல்லோகலப்படுத்தி வருகிறது. அதிலும் ஒரு காட்சியில் சில்க் பஸ்ஸில் அமர்ந்திருக்கும் பொழுது, எஸ் ஜே சூர்யா அடியே மனம் நில்லுனா நிக்காதடி பாடலுக்கு ஆடுவது போல் இருக்கும். இந்த காட்சிக்கு ரசிகர்களிடையே அப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

Also Read:ஜெயிக்கிற லாஜிக்கை ஒரு வழியாக கண்டுபிடிச்ச விஷால்.. விட்டுக் கொடுத்து கெட்டுப் போகாத மார்க் ஆண்டனி

Trending News