வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

93 வயதை நெருங்கும் சௌகார் ஜானகி.. எள்ளு பேத்தி எடுத்து 5 தலைமுறைகளை கண்ட குடும்ப புகைப்படம்

Sowcar Janaki: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை வெளுத்து வாங்கும் நடிகைகளில் சௌகார் ஜானகியும் ஒருவர். பழம்பெரும் நடிகையான இவர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

sowcar janaki
sowcar janaki

தமிழ் கன்னடம் தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் நடித்துள்ள இவர் அந்த காலகட்ட டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது 93 வயதை நெருங்கும் இவர் எள்ளு பேத்தி எடுத்து ஐந்து தலைமுறை கண்ட நாயகி என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

மிகச் சிறு வயதிலேயே திருமணம் ஆன இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கின்றனர். இவருடைய பேத்தி வைஷ்ணவியும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அண்ணாமலை படத்தில் சூப்பர் ஸ்டாரின் தங்கையாக வருபவர் தான் இவர்.

சௌகார் ஜானகியின் குடும்ப புகைப்படம்

டிசம்பர் 12 1931 ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். சௌகார் என்ற படத்தில் நடித்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது.

மேலும் அந்த காலகட்டத்திலேயே திரையுலகில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியமான ஒருவராகவும் இவர் வலம் வந்தார். அது மட்டும் இன்றி நடிக்க வரும்போது தனக்கு தேவையான காஸ்டியூம் உணவு கார் பெட்ரோல் போன்ற அனைத்திற்கும் சொந்த செலவு செய்த நடிகையும் இவர்தான்.

இப்படி பல பெருமைகளுக்கு சொந்தமான இவரின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய மகள், பேத்தி, கொள்ளு பேத்தி, எள்ளு பேத்தி என அனைவரிடமும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவர் பூரண ஆயுளுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

Trending News