வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

99.9% உறுதி ஆயிடுச்சு.. சிஷ்யனுக்காக களமிறங்கிய கமல், லியோ செய்யப் போகும் சம்பவம்

Actor Kamal: ஒரு படம் பூஜை ஆரம்பிக்கப்படும் முன்பிருந்தே ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது என்றால் அது லயோவாக மட்டும் தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு ஒட்டு மொத்த ரசிகர்களையும் லோகேஷ் தன் வசப்படுத்தி இருக்கிறார். அதிலும் இப்படத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்திருக்கிறது.

அந்த வகையில் இதில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் சீக்ரெட்டாக சில பிரபலங்களின் என்ட்ரியும் இருக்கிறது. அதிலும் கமல் இதில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கிறது.

Also Read: தற்கொலை வரை சென்ற கமல்.. கடைசி நேரத்தில் ஆண்டவரே காப்பாற்றிய உயிர் நண்பன்

ஏனென்றால் லியோ எல்.சி.யு பாணியில் தான் எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் விக்ரம் படத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் பட்சத்தில் கமல் நிச்சயம் கேமியோ ரோலில் வருவார் என்று கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் பொருட்டு தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.

அதாவது லியோவில் கமல் கட்டாயம் இருக்கிறார். அதிலும் அவருடைய காட்சிகள் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரும் வகையில் இருக்கிறதாம். இது 99.9% உறுதியான தகவல் தான். இதுதான் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

Also Read: ஹீரோயினை விட அழகான 6 சப்போர்ட்டிங் ஹீரோயின்.. அதிலும் ரஜினி, கமல் மருமகள்களின் அழகை அடிச்சுக்க ஆளே இல்லை!

அந்த வகையில் ஆண்டவரின் தரிசனத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே லியோ படத்திலிருந்து ஆண்டனி தாஸ், ஹரால்ட் தாஸ் கதாபாத்திரங்களின் வீடியோ வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

அதைத்தொடர்ந்து தற்போது சிஷ்யனுக்காக கமல் களமிறங்கி இருப்பது மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. அந்த வகையில் லோகேஷ் இதன் மூலம் லியோவில் மிகப்பெரும் சம்பவத்தை செய்வதற்கு தயாராகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read: 7வது நாள் ஜெயிலரின் வசூல்.. விக்ரம் வசூலை முறியடித்து சாதனை, அள்ள அள்ள குறையாத கலாநிதியின் கஜானா

Trending News