வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

புகழ் போதையில் கேஜிஎஃப் யாஷை அசிங்கப்படுத்திய ராஷ்மிகா மந்தனா! நடந்தது இது தானுங்க

இன்று இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் நடிகர் யாஷ். சில வருடங்களுக்கு முன்பு ரஷ்மிகா மந்தனா தரக்குறைவாக பேசியது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தற்போது  கன்னட சினிமாவை இந்திய அளவில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு உச்சத்தில் தூக்கி வைத்த பெருமைகள் அனைத்துமே நடிகர் யாஷ்  அவர்களையே சேரும். கேஜிஎஃப் என்ற ஒற்றை படத்தின் மூலம் மொத்த பேர் வாயையும் அடைத்து விட்டார்.

கன்னட சினிமாவின் வெற்றியை  பறைசாற்றும் விதமாக சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தின் டீசர் வெளியான சில நாட்களுக்குள்ளேயே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதுவே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருக்கும் அந்த நடிகரின் வளர்ச்சிக்கும் சான்றாக அமைந்தது.

அப்படி இந்தியாவே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நடிகர் யாஷ் அவர்களை ,அதே கன்னட சினிமாவில் இருந்து தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா தரக்குறைவாக பேசியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முன்னதாக கன்னட சினிமாவில் கொஞ்சம்கூட நடிகைகளுக்கு மரியாதையே இல்லை என்று கூறிவிட்டு தான் தெலுங்கு சினிமாவுக்கு தஞ்சமடைந்தார் ரஷ்மிகா மந்தனா. அதே சமயத்தில் தான் நடிகர் யாஷ் கேரியர் இன்னும் வெகு சீக்கிரத்தில் முடியப்போகிறது என ஆவேசமாக பேசியதாக தகவல்கள் வெளியானது.

அவருடைய நடத்தைக்கு விரைவில் தக்க பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து யாஷ் ரசிகர்கள் ரஷ்மிகா மந்தனாவை சமூகவலைதளத்தில் கண்டபடி திட்டி விட்டனர்.

இதனால் நொந்து போன ரஷ்மிகா மந்தனா யாஷ் பற்றி எனக்கும் என்னைப் பற்றி அவருக்கும் தெரியும்,  இடையில் யாரோ தேவையில்லாமல் இந்த வேலையை செய்துள்ளது சங்கடத்தை கொடுத்துள்ளதாகவும் அப்போதே ஒரு அறிக்கை வெளியிட்டார். தெலுங்கு சினிமாவில் நல்ல பெயர் கிடைத்ததும் கன்னட சினிமாவை தூக்கி எறிந்து பேசியது  நீங்கள் என தொடர்ந்து ரஷ்மிகாவை தாக்கி பேசி வருகின்றனர்.

rashmika mandanna
rashmika mandanna

Trending News