புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதியன்று ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார்.

மேலும் இன்று ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து மறைந்த போயஸ்கார்டனில் அமைந்துள்ள நினைவு இல்லத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர், அத்துடன் சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முழு உருவ வெண்கல சிலையையும் திறந்து வைத்துள்ளார்.

இந்த சிலையானது 9 அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் முழு உருவத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள், ‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கல்வித்துறையிலும், பெண்கள், குழந்தைகள், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செய்த சாதனைகளையும் பட்டியலிட்டார்.

Jayalalithaa-statue

அதுமட்டுமல்லாமல் மறைந்த ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியன்று அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், அன்றைய தினத்தில் ஜெயலலிதா அவர்களின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்’ என்றும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்களும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதா அவர்களின் வெண்கல சிலையை பெருமையுடன் பார்த்து செல்கின்றனர்.

Trending News