புதன்கிழமை, ஜனவரி 8, 2025

முதல்வரின் மீது எதிர்க்கட்சி வைத்த பொய் பிரச்சாரம்.. அம்பலமான உண்மை

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தங்களது கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக திமுகவினர் கபட நாடகம் ஆடுவது மக்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்து வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை சேவூரில் நடைபெற்ற எதிர்க்கட்சியின் பிரச்சாரத்தின்போது பேசிய எழிலரசி என்ற பெண் எதிர்பாராத விபத்தில் தனது தாய் இறந்ததாகவும் அதற்காக தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்ததாகவும், ஆனால் அது இன்று வகை தனக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்ட அதற்கான ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதன் மூலம் எதிர்க்கட்சியின் பொய் பிரச்சாரம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

அதாவது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் ஸ்டாலின் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, பேசிய எழிலரசி என்ற பெண் தனது வீட்டின் அருகே நடைபெற்ற சிலிண்டர் விபத்தில் தனது தாய் சந்திரா இறந்ததாகவும், இதற்காக தமிழக அரசு நிவாரணத் தொகையை அறிவித்ததாகவும், ஆனால் அந்த தொகை இன்று வரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்த சந்திராவின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் அறிவிக்கப்பட்டதோடு, அந்த தொகை சந்திராவின் மகனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

dmk

அதுமட்டுமில்லாமல் இதற்கு சான்றாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தனது வங்கி கணக்கில் இருந்து மின்னணு பரிவர்த்தனை மூலம் முத்துக்குமரனின் இந்தியன் வங்கி கணக்கிற்கு அனுப்ப பிறப்பித்த உத்தரவு உள்ளது.

அதேபோல் எழிலரசி தனது சகோதரனின் வங்கிக் கணக்கிற்கு நிவாரண தொகையை செலுத்த சம்மதம் தெரிவித்து கையொப்பமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் எழிலரசி கையொப்பமிட்டு உள்ள வாக்குமூல படிவமும் இதற்கு சான்றாக உள்ளது.

எனவே முதலமைச்சர் நிவாரண நிதியை பெற்ற பின்பும், தொகை கிடைக்கவில்லை என்று எழிலரசி பொய் சொல்லி இருப்பது எதற்கு? என்றும், திமுகவினர் திட்டமிட்டு எழிலரசியை இவ்வாறு சொல்ல வைத்தார்களா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுகவினர் இவ்வாறு பல கபட நாடகங்கள் ஆடி வருவது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சியினர் அரசின் மீது குற்றம் சொல்லி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதற்கு இந்த ஒன்றே பெரும் சாட்சியாகும். எழிலரசியின் கையொப்பமிடப்பட்ட வாக்குமூல பதிவு இதோ!

Trending News