சிம்பு சமீபத்தில் தான் தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடினார். வழக்கமாக சென்னையில் பிறந்த நாளை கொண்டாடும் சிம்பு இந்த முறை தன்னுடைய குடும்பத்தாருடன் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் சிம்புவின் பிறந்த நாளை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ஏக போகமாக கொண்டாடி வந்தனர். மேலும் ஒரு புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதை தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களையும் வெளியிட வைத்தனர்.
மேலும் சிம்புவின் பிறந்தநாளுக்கு அனைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் சிம்புவின் இரண்டாவது காதலியான ஹன்சிகா மோத்வானியும் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்த நிலையில் ஹன்சிகாவின் தாயார் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் இருவரும் பிரிந்துவிட்டதாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.
இருந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் ஹன்சிகா சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாரா சிம்புவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஆனால் நயன்தாராவின் தற்போதைய காதலரான விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் ஒரு நட்பு ரீதியாக கூட நயன்தாரா வாழ்த்து தெரிவிக்கவில்லையே என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்களாம்.
ஒருவேளை சிம்புவின் ஒவ்வொரு பட அறிவிப்புகளும் ஒன்பதாம் நம்பரை குறிவைத்து வெளியாவதால் நயன்தாரா அப்செட்டில் இருக்கிறாரா எனவும் தெரியவில்லை என்கிறார்கள். சிம்புவின் ஒவ்வொரு பட அப்டேட்ஸ் நேரத்தை கூட்டினால் ஒன்பது வரும்படி பார்த்துக் கொள்கிறாராம்.