மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார்.
மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லையாம். தியேட்டர்காரர்கள் தளபதி விஜய்யை தலையில் தூக்கிவைத்து தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.
இதே கூட்டம்தான் மாஸ்டர் படத்தை அமேசான் தளத்தில் விரைவில் வெளியிடுகிறேன் என்று சொன்னதற்கு விஜய் மற்றும் மாஸ்டர் தயாரிப்பாளரை திட்டினார்கள் என்பதும் மறுக்க முடியாத ஒன்று.
இந்நிலையில் விஜய் தற்போது தளபதி 65 படத்திற்காக ரெடியாகி கொண்டிருக்கிறாராம். வழக்கம்போல ஒரு படத்திற்கு முன்பு விஜய் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைப்பது வழக்கம்.
அதேபோல் தளபதி 65 படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறாராம். ஆனால் தளபதி விஜய்க்கு மாஸ்டர் படத்திற்குப் பிறகு அதிகமாக முடி வைத்துக் கொள்ளும் ஆசை வந்துவிட்டதாம்.
சமீபத்தில் திடீரென ரசிகர்களை சந்திக்க முடிவு எடுத்த விஜய் தன்னுடைய பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்திக்க சமீபத்தில் வந்துள்ளார். அப்போது கருப்பு கண்ணாடி, நரைத்த தாடி என ஆளே மொத்தமாக மாறி தாறுமாறு ஸ்டைலில் இருக்கிறார். இந்த புகைப்படம்தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.