ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அண்ணன் தம்பி விவகாரத்தை திரித்து வெளியிட்டது ஊடகங்களே.. அமைச்சர் ஜெயக்குமாரின் பரபரப்பான பேட்டி!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது  கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா விடுதலைப் பெற்று சென்னை திரும்பியுள்ளார். இதனால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல், சென்னை திரும்பிய சசிகலா பத்திரிகையாளர்களை  சந்தித்து பேசியபோது அதிமுகவினர் எந்த பிரிவினையும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக உள்கட்சி ஆலோசனைக் கூட்டத்தின் போது, கட்சியினரிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளை விட்டு பணியாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அமைச்சர் அண்ணன் தம்பி என்று கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் ‘சசிகலாவுக்கும்  திமுகவினருக்கும் பொது எதிரி அதிமுக தான்., எங்களுக்கு பொது எதிரி திமுக. இதனால் சசிகலாவும் தினகரனும் ஒன்றிணைவோம் வா என்று திமுகவை தான் அழைக்கிறார்கள்.  எங்களுக்கு அல்ல’ என்று அடித்துக் கூறுகிறார்.

Trending News