இன்றைய காலத்தில் யாரு வேணாலும் 100 கோடி வசூல் எடுக்கலாம். ஆனால் முதலில் 100 கோடி வசூல் எடுத்த பெருமையை யாராலும் முறியடிக்க முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தீனா படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். முதல் படமே இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று சிறந்த இயக்குனருக்கான அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.
அதன் பிறகு தொடர்ந்து தனது கடின உழைப்பால் அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வந்தார். இவர் இயக்கத்தில் வெளியான கஜினி படம் தான் இந்திய சினிமாவில் முதலில் 100 கோடி வசூல் பெற்று சாதனை படைத்தது. அதன் பிறகுதான் பல இயக்குனர்கள் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் என்ற சாதனையை தொட்டனர்.
அதுமட்டுமில்லாமல் கஜினி படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய அனைத்து படங்களுமே 100 கோடிக்கு மேல் தான் வசூல் பெற்றன.
- ஏழாம் அறிவு – 100 கோடி
- துப்பாக்கி – 15 நாட்களில் 100 கோடி
- கத்தி – 12 நாட்களில் 100 கோடி
- சர்கார் – 2 நாட்களில் 100 கோடி
ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் இயக்கிய கஜினி, ஹாலிடே, ஸ்பைடர் ஆகிய படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் பெற்றுள்ளன. இப்படி பாக்ஸ் ஆபீஸில் பல வெற்றிகளை குவித்த முருகதாஸுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்பதே ஆச்சரியம்தான். அதிலும் தளபதி 65 பட வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி கடைசி நேரத்தில் கைவிட்டுப் போனது அவரை மனதளவில் மிகவும் பாதித்து விட்டதாம்.