VIP படத்தில் தனுஷின் தம்பியாக நடிக்க மறுத்த விஜய் டிவி பிரபலம்.. சிவகார்த்திகேயன் சொல்லியும் கேட்கலையாம்!

dhanush
dhanush

தனுஷின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படம் என்றால் அது விஐபி தான். மிகச் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வசூலை வாரி குவித்தது. பட்ஜெட்டை விட பல கோடி லாபம் கொடுத்த விஐபி படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கினார்.

அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதுமட்டுமில்லாமல் விஐபி படத்தில் நடித்த சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் கதாபாத்திரம் போன்று அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

அப்படிப்பட்ட தனுஷின் பட வாய்ப்பை தவிர்த்துவிட்டு தற்போதுவரை அந்த வாய்ப்பை இழந்துவிட்டோமே என விஜய் டிவி பிரபலம் ஒருவர் பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம் புலம்பி தவிக்கிறாராம். இத்தனைக்கும் சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்தும் கேட்கவில்லையாம்.

விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக உள்ளே வந்தவர் தான் விக்னேஷ் கார்த்திக். அதன் பிறகு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் கார்த்திக் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் வெளியான யுவர்ஸ் சேம்புல்லி என்ற குறும்படம் செம ஃபேமஸ்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திட்டம் இரண்டு எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கு தான் முதன்முதலில் விஐபி படத்தில் தனுஷ் தம்பியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

vigneshkarthik-cinemapettai
vigneshkarthik-cinemapettai

ஆனால் அப்போது வேறு ஒரு ஆடிஷனில் மாட்டிக்கொண்டதால் விஐபி படத்தை தவிர்த்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போதும் விஐபி படம் பார்க்கும்போது இந்த கதாபாத்திரத்தை மிஸ் செய்து விட்டோமே என வருத்தப்படுவாராம் விக்னேஷ் கார்த்திக்.

Advertisement Amazon Prime Banner