வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன்.. மகளிர் தினத்தன்று தமிழக முதல்வர் உறுதி மொழி!

இன்று சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு சவால்களை வாழ்வியல் ரீதியாக மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிர்க்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டு, அதன்பின் பெண்கள் நலத்திட்டங்களை மறைந்த முதல்வர் அம்மாவின் வழியில் தொடர்ந்து செயலாற்றுவோம்.

அதற்கு சான்றாக மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம், மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பெண்களுக்கான காப்பீட்டுத்தொகை, மகளிருக்காக முழு உடல் பரிசோதனை திட்டம், காவலன் செயலி என பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

eps-womans day
eps-womans day

அதுமட்டுமில்லாமல் பெண்கள் பாதுகாப்பை தமிழகத்தில் என்றும் உறுதி செய்வேன் என்ற உறுதிமொழியையும் தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலை தளங்களின் வாயிலாக மகளிர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Trending News