தமிழ் சினிமாவில் பல நடன இயக்குனர்கள் ஆரம்ப காலத்தில் படங்களில் ஏதாவது ஒரு பாடல் காட்சியில் ஓரமாக நடனமாடி இருப்பார்கள். அதன் பிறகு சரியான வாய்ப்பை பயன்படுத்தி கோரியோகிராபர் ஆக முன்னேறுவார்கள்.
இப்படி படிப்படியாக முன்னேறி ராபர்ட் மாஸ்டர் தமிழில் கிட்டத்தட்ட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஆனால் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தான் ராபர்ட் மாஸ்டர் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் 1996 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தமிழ் செல்வன் படத்தில் பேக் டான்ஸராக நடனமாடியுள்ளார்.
கல்லூரி சாலை படத்திலும் மற்றும் லவ் டுடே படத்தில் “என்ன அழகு எத்தனை அழகு” பாடலில் பேக் டான்ஸராக நடனமாடியுள்ளார். சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்திலும் “போட்டு தாக்கு” பாடல் மூலம் இவரது சினிமா வாழ்க்கையை அப்படியே மாறியது.
அதன் பிறகு விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 2005ஆம் ஆண்டு டான்ஸர் படத்தில் சிறந்த வில்லனான தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளார்.
“மச்சா மீச வீச்சருவா” பாடலில் நடித்திருக்கும் அல்போன்ஸ் தம்பி தான் ராபர்ட் மாஸ்டர். ராபர்ட் மாஸ்டர் வனிதாவுடன் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தற்போது நடன இயக்குனராக பல பாடல்களுக்கு பணியாற்றி வருகிறார்.