புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இன்னும் அவங்க கூட மட்டும்தான் நடிக்கல, விக்ரம் படத்துக்கு ஓகே பண்ணிடுங்க.. 36 வயது நடிகையை குறிவைத்த கமல்

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து விக்ரம் படத்தில் பணியாற்ற உள்ளார். இந்த படத்திற்கான முதல் கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக தேர்தலுக்கு முன்பே விக்ரம் படத்தை முடிப்பதாக திட்டம் போட்டனர். ஆனால் தற்போது கமலஹாசன் அரசியலில் மிகத் தீவிரமாக இறங்கி உள்ளதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிச் சென்றது. பெரும்பாலும் மே மாதத்தில் தான் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

மேலும் அதுவரை சும்மா இருக்க முடியாதல்லவா, அதனால் விக்ரம் படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வுகளை பொறுமையாக நடத்தி வருகிறதாம் படக்குழு. அந்த வகையில் இதுவரை கமலஹாசனுடன் நடிக்காத நடிகர் நடிகைகள் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக இதுவரை கமலஹாசனுடன் நடிக்காத நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். கதைப்படி இரண்டு கதாநாயகிகள் தேவைப்படுகிறதாம். அதில் ஒன்று நயன்தாராவாக இருக்கவேண்டும் என கமல், லோகேஷ் கனகராஜுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம்.

nayanthara-cinemapettai
nayanthara-cinemapettai

இதன் காரணமாக லோகேஷ் தன்னுடைய படையுடன் நயன்தாராவிடம் கால்ஷீட் வாங்க சென்றுவிட்டாராம். பல வருடமாகவே நயன்தாராவை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கமல் முயற்சி செய்து வருகிறார். ஆனால் நயன்தாரா அவரது பிடியில் சிக்காமல் நீண்ட நாட்களாக டிமிக்கி கொடுத்த நிலையில் தற்போது ஜோடி சேர்ந்து விடுவார்கள் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொள்ள இருப்பதால் திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தெரியாதல்லவா. அதன் காரணமாக பெரிய சம்பளம் பேசி செட்டிலாகவும் அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

Trending News