வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஸ்டாலின் அறிவித்த 7 தேர்தல் வாக்குறுதிகள்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!

தமிழகத்தில் அண்மையில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் வரிசையாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவரும்,

திமுக கட்சியின் தலைவருமான ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டின் மூலம், திமுக கட்சி வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இந்த ஏழு வாக்குறுதிகள் இதோ!

முதலாவதாக வளரும் வாய்ப்புகள் மற்றும் வளமான தமிழ்நாடு என்ற தலைப்பில், பொருளாதார வளர்ச்சியை இரட்டிப்பாக்குவதை இலக்காக கொண்டு, உற்பத்தியின் அளவை இரட்டிப்பாக்குவதற்கு ரூபாய் 35 லட்சம் கோடி செலவு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக மகசூல் பெருக்கம் விவசாயிகளை மகிழ்விக்கும் என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய நிலங்களை அதிகப்படுத்தி, விவசாய நிலங்களை கணக்கெடுத்து தகுந்த முறையில் வழிகாட்டுதலின் பெயரில் மகசூலை பெருக்க செய்வேன்.

மூன்றாவதாக குடிமக்கள் அனைவருக்கும் குறையாத குடிநீர் என்ற தலைப்பில் நாளொன்றிற்கு வீணாகும் தண்ணீரின் அளவை 50 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்து, நீர் தட்டுப்பாட்டை போக்குவேன்.

நான்காவதாக அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் என்ற தலைப்பில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநின்ற விகிதத்தை 16 இல் இருந்து 5 சதவீதமாக குறைக்க போவதாக கூறியுள்ளார்.

ஐந்தாவதாக அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என்ற தலைப்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படும். மேலும் பட்டியல் இனத்தார், பழங்குடியினர் போன்றோருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும்.

ஆறாவதாக எழில் மிகுந்த மாநகரங்கள் என்ற தலைப்பில் நகர்ப்புறங்களில் கூடுதலாக 36 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்க வழி செய்யப்படும்.

ஏழாவதாக உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்தர வாழ்க்கைத்தரம் என்ற தலைப்பில் எல்லா கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியாக இந்த ஏழு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்.

Trending News