வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அதிமுக அரசின் சாதனைகளையே தேர்தல் வாக்குறுதிகளாக பட்டியலிட்ட திமுக.. அதிருப்தியில் தொண்டர்கள்

வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, மும்முரமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின், நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு என பட்டியலிட்டுள்ளார்.

அதில் பெரும்பாலானவை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய அல்லது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களாகவே இருந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் சுமார் 500 கலைஞர்கள் உணவகம் தொடங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் இருந்ததால்.

ஏற்கனவே 2013ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைத்த போதே 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மின் மோட்டார் வாகனங்கள் வாங்குவதற்கு மானியமாக ரூபாய் 10,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோருக்கு இலவசமாக மின் மோட்டார்கள் 2012ஆம் ஆண்டு முதலிலிருந்தே வழங்கப்பட்டு வருகிறது.

 

அதைப்போல் இந்து யாத்திரிகள் தங்கள் புனித பயணத்திற்காக தலா ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும் என்றும், மாவட்டங்களிலும் மக்கள் குறைகேட்பு முகாம்கள் அமைக்கப்படும் என்றும், கொரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும்,

ஆறுகளை தூர்வாரப்பட்டு சீரமைத்த பராமரிக்கப்படும் எனவும், குடிநீர் ஆனது வாகனங்கள் மூலம் விநியோகம் செய்வதை நிறுத்தி, குழாய்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும், குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டுவசதி திட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

எனவே ஸ்டாலின் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதி திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியின் சாதனைகளாகவே இருப்பதாக கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending News