தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அதனை ஏதோ ஒரு காரணத்தினால் தவிர்த்து விடுவார்கள். அப்படித்தான் விக்ரமிற்கு பதிலாக சேது படத்தில் நடிப்பதற்கு முதலில் 3 நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த நடிகர்கள் யார் யார் மற்றும் விக்ரமிற்கு சிபாரிசு செய்த நடிகர் யார் என்பதையும் பார்ப்போம்.
விக்ரம் ஆரம்ப வாழ்க்கையில் வெற்றி படங்களை கொடுப்பதற்கு தடுமாறி வந்தார். அதுமட்டுமில்லாமல் சரியான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்க தெரியாமல் இருந்தார்.இப்படி சினிமாவில் தடுமாறிக் கொண்டிருந்த விக்ரமிற்கு சேது படம் தான் அவரது சினிமா வாழ்க்கையை தூக்கி கொடுத்தது என்று கூறலாம்.
சேது படம் எப்படி உருவானது என்பதை பார்ப்போம். முதலில் விக்ரமிற்கு பதிலாக சேது படத்தில் செல்வா, விக்னேஷ் மற்றும் முரளி ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளனர். பின்பு சரியான தயாரிப்பாளர்கள் யாரும் அமையாததால் இப்படம் பல காலமாக உருவாகாமலேயே இருந்தது.
பின்பு இளையராஜா மற்றும் சிவகுமார் பாலாவிற்கு பல தயாரிப்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இளையராஜா மற்றும் சிவக்குமார் 1991 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 9 வருடங்கள் பாலாவிற்கு உதவியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் பாலாவிடம் சிவகுமார் இப்படத்தில் விக்ரம் கூட நடிக்க வைக்கலாம் என கூறியுள்ளார். அதன் பிறகுதான் சேது படத்தில் நடிப்பதற்கு விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த மாதிரி இப்படம் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஆனால் இளையராஜா மற்றும் சிவகுமார் 9 வருடங்கள் பாலாவிற்கு துணையாக இருந்துள்ளார்கள் என்பது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே பாலாவின் படம் என்றால் மேக்ஸிமம் இளையராஜாவை வைத்துதான் இசையமைக்க திட்டமிட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.