வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அனைத்து வியாபாரிகளின் உற்சாக வரவேற்பை பெற்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கை!

கடந்த 14ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அதுமட்டுமில்லாமல் வியாபாரிகளுக்கு வட்டியில்லா சுழல் நிதி, வணிகர்களுக்கு தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் சலுகை,

250 ஆக உயர்த்தப்படும் என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதன் மூலம் அனைத்து வியாபாரிகளிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறார். அதேபோல் நடைபாதை வியாபாரிகளின் நலன்கருதி, ரூபாய் 10 ஆயிரம் வரை வட்டியில்லா சுழல் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனால் கொரோனால் பாதிக்கப்பட்ட தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

EPS-announcement
EPS-announcement

அதைப்போல் சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் சலுகை 200 குதிரை திறனில் இருந்து 250 குதிரை திறன் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சிறு வியாபாரிகள் முதல் சிறு குறு தொழில் புரிபவர்கள் வரை அனைவரிடமும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஆனது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Trending News