ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விக்ரமின் தில் படத்தில் கர்லிங் ஹேர் வைத்து நடித்துள்ள ரோபோ ஷங்கர் மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படம்

சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் பல குரல் மன்னனாக கலக்கி பின்னர் விஜய் டிவியில் கவனிக்கப்படும் காமெடி நாயகனாக வலம் வந்தவர் ரோபோ சங்கர்.

தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக இளம் நடிகர்களுக்கு மாமா வேடத்தில் நடிக்க ரோபோ ஷங்கருக்கு சரியான வயது இருப்பதால் பெரும்பாலான படங்களில் அவருக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அதேபோல் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும் சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து வருகிறார். மேலும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இதுநாள்வரை ரோபோ சங்கரின் மனைவி ப்ரியங்கா ரோபோ ஷங்கர் சினிமாவுக்கு வந்ததால் தான் அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் பிரியங்கா விக்ரம் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான தில் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

தில் படத்தில் நடிகை லைலா ஐஸ் கிரீம் எப்படி செய்வது என சமையல் நிகழ்ச்சியில் சொல்வது போல ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். அந்தக் காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த காட்சியில் தான் ரோபோ சங்கரின் மனைவி நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்திருப்பார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது. அதிலும் கர்லிங் ஹேர் வைத்து பிரியங்கா கலக்கலாக இருப்பார்.

robo-shankar-wife-priyanka-dhill
robo-shankar-wife-priyanka-dhill
- Advertisement -

Trending News