தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கர்ணன். திரும்பும் திசையெல்லாம் கர்ணன் பற்றிய பேச்சுதான்.
அசுரன் படத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு கர்ணன் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தாலும் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை.
முதலில் கர்ணன் படம் கொரானா கட்டுப்பாடுகளால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் கர்ணன் படம் ரிலீஸாவதற்கு முன்னரே கிட்டத்தட்ட 65 கோடி வரை லாபம் பார்த்து விட்டதாம்.
கர்ணன் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 21 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறுகின்றனர். தனுஷ் கேரியரில் ஒரு படம் திரையரங்கில் வெளியாகி டிஜிட்டல் தளத்திற்கு இவ்வளவு பெரிய விலைக்கு வருவது இதுதான் முதல் முறையாம்.
![karnan-amazon](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/04/karnan-amazon.jpg)
ஜகமே தந்திரம் திரைப்படம் 60 கோடிக்கும் மேல் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால் அது நேரடி ஓடிடி ரிலீஸ். இதன் காரணமாக தற்போது டிஜிட்டல் துறைகளிலும் தன்னுடைய வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளார் தனுஷ்.
அசுரன் படத்தை போலவே கர்ணன் திரைப்படம் 100 கோடி வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நடிகர்கள் மாஸ் படங்கள் கொடுத்து வசூலை ஈட்டி வரும் நிலையில் தனுஷ் மட்டும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவு பெரிய வசூலை ஈட்டி வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.