சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தும் பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்ல.. காட்டத்தில் பிரீத்தி ஜிந்தா!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடந்த நேற்றைய 4வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டி கடைசி பந்தில் தான் பஞ்சாபின் வெற்றியை தீர்மானித்தது.

400 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்ட இந்த போட்டியில் இரண்டு அணிகளுமே பந்துவீச்சில் சொதப்பியது. கிட்டத்தட்ட ராஜஸ்தான் கையிலிருந்த போட்டியை கடைசி பந்தில் தான் தன்வசம் ஆக்கியது பஞ்சாப் கிங்ஸ்.

நேற்று பஞ்சாப் அணி வெற்றிபெற்று இருந்தாலும், அந்த அணியில் சில முக்கியமான மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. முக்கியமாக பஞ்சாப் அணி தனது பவுலிங்கை கொஞ்சம் வலிமையாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பஞ்சாப் அணியில் அதிகமாக ஏலத் தொகை கொடுத்து எடுக்கப்பட்ட 2 வீரர்கள் நேற்றைய போட்டியில் சரியாக விளையாடவில்லை. பஞ்சாப் அணி இந்த சீசனில் ஜெய் ரிச்சர்ட்சன் மற்றும் ரைலி மெரிடித் இருவரையும் அதிகம் நம்பியது. தங்கள் அணியின் டாப் பவுலர்களாக இவர்கள் இருப்பார்கள் என கணக்குப் போட்டு அவர்களை பெருந்தொகை கொடுத்து எடுத்தது.

ஜெய் ரிச்சர்ட்சனை 14 கோடிக்கும்,ரைலி மெரிடித்தை 8 கோடிக்கும் ஏலம் எடுத்தது. ஆனால் இவர்கள் இருவரும் ரன்களை வாரி வழங்கினர். 4 ஓவர் வீசிய ஜெய் ரிச்சர்ட்ஸன் 55 ரன்கள் கொடுத்து வெறும் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.

மறுமுனையில் ரைலி தன் பங்கிற்கு 4 ஓவர் போட்டு 49 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இத்தனை கோடிகள் கொடுத்து இவர்களை எடுத்தும் பலன் அளிக்கவில்லை என்று கடுப்பில் உள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.

Preethi-Cinemapettai.jpg
Preethi-Cinemapettai.jpg

Trending News