வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

அஜித் போல் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா.. வைரலாகும் சூட்டிங்க் ஸ்பார்ட் புகைப்படம்

அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார் தல அஜித். முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் இருந்தது அந்த திரைப்படம்.

அஜித் என்றாலே மாஸ் தான் என்ற அடிப்படை பார்முலாவை மாற்றி என்னால் கிளாசிக் படமும் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் தல அஜித். வசூலிலும் இந்த படம் குறை வைக்கவில்லை.

பெண்களுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அஜித். தற்போது அதே போன்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கும் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூர்யா தற்போது பெயரிடப்படாத படத்தில் ஒரு நீளமான கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறாராம். தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும், படத்தைப் பற்றிய செய்திகளும் வெளிவந்ததில்லை.

ஆனால் இந்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இதில் சூர்யா ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு சமூக கருத்துக்காக எடுக்கப்படும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது.

இதுவரை சீக்ரெட்டாக வைத்திருந்த இந்த படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என காத்திருந்த சூர்யாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாம் இந்த கசிந்த புகைப்படங்கள்.

suriya-untittled-movie
suriya-untittled-movie

Trending News