கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. இவருடைய சின்ன சின்ன சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன. தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு அடுத்த கட்டமாக தமிழிலும் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்.
நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என தீர்க்கமாக இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியான திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவாகிய சுல்தான் தான்.
ரஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வெளியான தெலுங்குப் படங்கள் அனைத்துமே 100 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது. பிரபல நடிகர்களின் படங்களாக இருந்தாலும் ரஸ்மிகா மந்தானா நடிக்கும் படங்களுக்கு தனியாக கூடுதல் வரவேற்பு இருக்கிறது.
கன்னட சினிமாவின் பிரபல நடிகருடன் பிரேக்கப் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவில் தஞ்சமடைந்த ரஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு சினிமாவில் தேவதையாகவே மாறி விட்டாராம். இளம் ரசிகர்களிடம் அப்படி ஒரு வரவேற்பு இருக்கிறதாம் அம்மணிக்கு.
மலையாள நடிகை நஸ்ரியாவுக்கு பிறகு தன்னுடைய அழகான முக பாவனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவராக ரஷ்மிகா மந்தனா வலம் வருகிறார். அந்த வகையில் அப்படி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துக்கு தற்போது வரை 31 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.