விஜய்க்காக எழுதிய கதையில் பாடல்கள் நன்றாக இருக்கிறதே என எண்ணி தேவையில்லாமல் மாட்டிக் கொண்டோமே என கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம் டாப் ஸ்டார் பிரசாந்த்.
விஜய்யும் சரி பிரசாந்தும் சரி தங்களுடைய ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து காதல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தனர். அது அவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது என்பதும் மறுக்க முடியாத ஒன்று.
விஜய்யின் கேரியரில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் அப்போது அவருக்காக ஏஆர் ரகுமான் இசையில் காதல் ரசம் சொட்டச் சொட்ட ஒரு கதையை எழுதினாராம் இயக்குனர் பிரவீன் காந்தி.
ஆனால் விஜய் அந்த படத்தில் பெரிதும் நடிக்க ஆர்வம் காட்டாததால் அதன் பிறகு பிரசாந்த் உள்ளே வந்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரனை உள்ளே இழுத்து, ஏ ஆர் ரகுமான் இசையில் ஒவ்வொரு பாடல்களையும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க செய்து மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது ஜோடி திரைப்படம்.
ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படம் வெளியான பிறகு விஜய் எப்படியோ நம்ம தப்பித்து விட்டோம் என யோசிக்கும் அளவுக்கு ஜோடி படம் தோல்வியடைந்து விட்டதாக கூறுகின்றனர்.
ரட்சகன் போன்ற மிக பிரமாண்ட படங்களை கொடுத்த பிரவீன் காந்தி எப்படி இவ்வளவு எளிமையான காதல் படத்தை கொடுத்தார் என்ற பேச்சிலேயே அந்த படம் தோல்வி அடைந்ததாகவும் கோலிவுட்டில் ஒரு கருத்து உள்ளது. ஆனால் ரட்சகன் படமே ஒரு தோல்விப் படம்தான் என்பதை எங்கு போய் சொல்வது.