வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

முதலமைச்சர் ஆகியும் முழுசா சந்தோஷப்பட முடியலையே.. அப்செட்டில் ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம்(DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளதை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(ADMK) 75 இடங்களை கைப்பற்றி தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் கொங்கு மண்டலம்தான்.

எல்லாரும் ஸ்டாலின் முதலமைச்சரானதை கொண்டாடி வரும் நிலையில் ஸ்டாலின் வேறொரு விஷயத்தில் மிகவும் அப்செட்டாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த சில வருடங்களாகவே திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பிரம்மாண்ட ஆட்சியமைக்கும் எனக் கூறி வந்தனர்.

கடந்த சில வாரங்களில் வந்த கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் 160 முதல் 180 தொகுதிகள் வரை திமுக ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் திமுகவுக்காக வேலை செய்த ஐடி நிறுவனங்கள் பலவும் திமுக கண்டிப்பாக 200+ தொகுதிகளில் வெற்றிபெறும் என ஸ்டாலினுக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

திமுக நேரடியாக போட்டியிட்ட 173 தொகுதிகளில் 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து மொத்தம் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் ஸ்டாலின் நினைத்தது 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயித்துவிட வேண்டும் என்பதுதான்.

அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என தன்னுடைய தொண்டர்களுக்கும் ஐடி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். அவர்களும் இறங்கி தீயாய் வேலை செய்தனர். ஆனால் கடைசியில் கொங்கு மண்டலம் வழக்கம்போல அதிமுகவின் வசம் வந்து விட்டது.

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விடுவோம் என நம்பிக்கையாக கூறி வந்த ஸ்டாலின் 159 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதை அறிந்து மிகவும் அப்செட் ஆகிவிட்டாராம். கொங்கு மண்டலம் கைவிட்டுப் போனதை ஜீரணிக்க முடியவில்லை என தன்னுடைய வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம். இத்துடன் அதிமுக கட்சியை அட்ரஸ் இல்லாமல் செய்துவிட வேண்டும் என கட்டம் கட்டிய ஸ்டாலினுக்கு இந்த விஷயம் கொஞ்சம் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamilnadu-election2021-result
tamilnadu-election2021-result

Trending News