தமிழ் சினிமா ரசிகர்களிடம் சுல்தான் படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் ஏற்கனவே தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமானார்.
அதுவும் கீதகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமடைந்து ஒரு கட்டத்திற்கு பிறகு ராஷ்மிகா எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இவரது நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் ராஷ்மிகா நடிப்பை கொண்டாடினர். அதுமட்டுமில்லாமல் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் எப்போது தமிழ் நடிப்பேன் என ஆவலாய் இருந்ததாகவும் தெரிவித்ததையடுத்து பல ரசிகர்களும் இவரை கொண்டாடித் தீர்த்தனர்.
ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தமிழ்நாட்டு கலாச்சாரம் மிகவும் பிடித்துபோனதால் விரைவில் தமிழ்நாட்டு மருமகளாக வருவேன் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு சாப்பாடு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள் சும்மா இருப்பார்களா தற்போது சமூக வலைதளங்களில் யாரை கல்யாணம் பண்ண போகிறார். நம்மளையும் கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும் என சமூக வலைத்தளங்களில் முணுமுணுத்து வருகின்றனர்.
ஆரம்ப காலத்தில் நடிகைகள் இப்படி தான் கூறுவார்கள் ஆனால் இறுதியில் யாராவது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துவிட்டு செட்டில் ஆகிவிடுவார்கள் என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது.