தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யா போன்றோரின் படங்களில் நடிக்க இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை அனைவருமே ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
அதற்கு காரணம் இந்த மாதிரி முன்னணி நடிகர்களுடன் ஒரு படத்தில் நடித்துவிட்டால் தங்களுடைய சம்பளத்தை ஈசியாக ஏற்றிக் கொள்ளலாம் என்பதுதான். முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக நடிகைகள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள இரண்டாம் கட்ட நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு வந்த நடிகை ஒருவருக்கு சூர்யாவின் படவாய்ப்பு கொஞ்ச நாள் முன்னாடி கிடைத்தது.
சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் வெளிவர இருந்த அருவா படத்தில் ஒப்பந்தமானவர்தான் 30 வயதான இளம் நடிகை ராசி கண்ணா. இதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக சொல்லவில்லை என்றாலும் ராசி கண்ணாவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அதே நேரத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் சர்தார் பட வாய்ப்பை பெற்றுவிட்டார் ராஷி கண்ணா. ராஷி கண்ணா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் தமிழ் சினிமாவில் உங்களுடைய பேவரிட் ஹீரோ யார்? என கேட்டதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் விஜய் எனவும், வாழ்க்கையில் அவருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் எனவும் கூறியதை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.