வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செய்த செயல்.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கோடிகள் வசூல் பெற்று வருகின்றன. அதனாலேயே நயன்தாராவை காலப்போக்கில் லேடி சூப்பர் ஸ்டார் என திரைத்துறையில் அனைவரும் அழைத்தனர்.

தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வரும் நயன்தாரா அவ்வப்போது தனது காதலனையும் சந்திக்க தவறுவதில்லை. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வரும் செய்தி பல வருடங்களாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது

முதலில் அமைதியாக இருந்த இருவரும் தற்போது எந்த செயலை செய்தாலும், எந்த ஊருக்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செய்கிறார்கள். அதனாலேயே விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொள்வார்கள் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

nayanthara
nayanthara

தற்போது இந்த காதல் ஜோடி ஒன்றாக இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vignesh shivan
vignesh shivan

சமீபகாலமாக திரைப் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமல்லாமல் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இடம் பிடித்துள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாரா தடுப்பூசி போடவில்லை போல் தெரிகிறது என கூறி வருகின்றனர். ஏனென்றால் நயன்தாரா தடுப்பூசி போடும் நர்ஸ் கையில் தடுப்பூசி இல்லாததுபோல் தெரிவதே இதற்கு காரணம்.

Trending News