ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அண்ணாச்சி ஜோடியாக நடிக்கும் ஊர்வசி ராவ்டேலா எவ்வளவு சம்பளம் தெரியுமா? பணம் வைக்கிறதுக்கு 10 பெட்டி வேணுமே!

தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்கும் போட்டியாக களமிறங்கியுள்ள ஒரே நடிகர் சரவணன் ஸ்டோர் அண்ணாச்சி. சமீப காலமாக இவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தை பற்றிய தகவல்தான் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

சரவணன் அருள் மிகப்பெரிய தொழிலதிபர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அண்ணாச்சி வைத்து விளம்பர படங்களை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இயக்குனர்கள்தான் அண்ணாச்சியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகின்றனர்.

இப்படத்தின் சண்டை காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. அண்ணாச்சி படத்தில் எப்படி நடித்துள்ளார் என்ற ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளது.

annachi-saravana-cinemapettai
annachi-saravana-cinemapettai

கொரோனா ஊரடங்கு காரணமாக அண்ணாச்சியின் படம் சற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கும் முடிந்தபிறகு மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டு படத்தை முடித்துக் கொடுப்பார் என படதரப்பினர் கூறியுள்ளனர்.

அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்கும் ஊர்வசி ராவ்டேலாவிற்கு 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாச்சி படத்தில் நடிக்க பல நடிகைகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு நடிகையும் நடிக்கமாட்டேன் என பில்டப் கொடுத்தனர்.

ஆனால் தற்போது இப்படத்தின் கதாநாயகி ஊர்வசி ராவ்டேலா  2 கோடி சம்பளம் கொடுத்ததை பார்த்துவிட்டு வாய்ப்பை தெரியாமல் மிஸ் பண்ணிட்டோமே என தற்போது வருத்தப்பட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News