தனுஷை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு சமீபகாலமாக சினிமா வட்டாரங்களில் செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு தன்னுடைய இயக்குனர்களில் தேர்வை சிறப்பாக செய்து வருகிறார்.
தமிழ் நடிகராக இருந்து தற்போது உலகமே கவனிக்கும் நடிகராக மாறிய தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து தன்னுடைய பேவரிட் பாலிவுட் இயக்குனர் பால்கி என்பவருடன் மீண்டும் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் துல்கர் சல்மான் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஏற்கனவே தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனை வைத்து ஷமிதாப் என்ற படத்தை எடுத்த இயக்குனர் பால்கி உடன் இணைய ஆசைப்படுவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
தமிழில் தனுஷ் எப்படியோ அப்படித்தான் மலையாளத்தில் துல்கர் சல்மான். தனுசை போலவே கார்வான், தி சோயா பேக்டர் போன்ற இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து ஹிந்தியிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் பால்கி மற்றும் துல்கர் சல்மான் இணையும் படத்திற்கு தனுஷ் பிரத்தியேகமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக தெரிகிறது. தனுஷுக்கு பாலிவுட்டில் ஒரு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது போல துல்கர் சல்மானுக்கும் மிகப்பெரிய வசூல் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.