புதன்கிழமை, டிசம்பர் 4, 2024

சந்திரலேகா சீரியல் விஜய் கிருஷ்ணராஜ் இயக்கிய 5 படங்கள்..

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பல நடிகர்கள் ஒருகாலத்தில் இயக்குனர்களாக ஒருசில படங்களை இயக்கியுள்ளனர். அதில் சில படங்கள் வெற்றியடைந்தால் இறுதிவரை படங்களை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனதால் அதில் ஒரு சில இயக்குனர்கள் நடிகர்களாக மாறிவிட்டனர். அப்படி இயக்குனராக இருந்து தற்போது நடிகராக ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் விஜய் கிருஷ்ணராஜ். என்னென்ன படங்களை இயக்கியுள்ளார் என்பதை பற்றி பார்ப்போம்.

கண்ணேடு கண்

kannedu kan
kannedu kan

இவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் 1982 ஆம் ஆண்டு ரவிக்குமார் மற்றும் தலக்ஷனா நடிப்பில் வெளிவந்த கண்ணேடு கண் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை.

சிம்மசொப்பனம்

simma soppanam
simma soppanam

1984 ஆம் ஆண்டு சிவாஜி மற்றும் பிரபு நடிப்பில் உருவான சிம்ம சோபனம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் கேஆர் விஜயா மற்றும் ராதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்று விஜய் கிருஷ்ணாவிற்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

திறமை

thiramai
thiramai

1985ஆம் ஆண்டு சத்யராஜ் மற்றும் ரேவதியை வைத்து திறமை எனும் படத்தை இயக்கியிருந்தார். படத்தின் பெயர் திறமையாக இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விஜய் கிருஷ்ணாவிடம் திறமை இல்லை எனவே கூறினார்கள். ஏனென்றால் இப்படம் சற்று சரிவை சந்தித்தது.

வாழ்க வளர்க

1987ஆம் ஆண்டு ராதாரவியை வைத்து வாழ்க வளர்க எனும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ராதாரவியின் திரைவாழ்க்கையில் பெரிய படமாக பார்க்காவிட்டாலும் அன்றைய காலத்தில் அப்போது இதனை பெரிதாக பார்க்கப்பட்டது.

அண்ணன் என்னடா தம்பி என்னடா

annan ennada thambi ennada
annan ennada thambi ennada

1992 ஆம் ஆண்டு அர்ஜுன் மற்றும் நிரோஷா வைத்து அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் அர்ஜுனன் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை.

தாட்பூட் தஞ்சாவூர்

thaatboot thanjavoor
thaatboot thanjavoor

1994 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் நடிப்பில் வெளிவந்த தாட்பூட் தஞ்சாவூர் எனும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை தமிழ் சினிமாவில் ஒரு சில தோல்வி படங்களை கொடுத்ததால் அடுத்தடுத்து படங்களை இயக்க முடியாமல் நடிகராக மாறினார் விஜய் கிருஷ்ணராஜ்.

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் சந்திரலேகா என்னும் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -spot_img

Trending News