தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் நடிகராக வலம் வந்த நாகேஷ் உடன் ஏ ஆர் முருகதாஸ் நடித்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவருடைய படங்கள் பல முன்னணி நடிகர்களுக்கும் திருப்புமுனை கொடுத்த படங்களாக அமைந்தன.
அந்தவகையில் அஜித்திற்கு தீனா, விஜயகாந்த் சினிமா கேரியரில் மறக்க முடியாத ரமணா, சூர்யாவின் கேரியர் பெஸ்ட் கஜினி மற்றும் ஏழாம் அறிவு, விஜய்யின் கேம் சேஞ்சிங் படங்களான துப்பாக்கி, கத்தி போன்றவை அனைத்துமே முருகதாஸின் படைப்புகள்தான்.
இப்படி பலருக்கும் பல வெற்றிகளை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் இணை இயக்குனராகவும், கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடிக்க உள்ளார் என்பதை அவரே கொஞ்ச நாட்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்கிறார்.
அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு வெளியான பூச்சூடவா என்ற படத்தில் வீட்டுப் பணியாளர் வேடத்தில் நடித்துள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ வைத்துள்ளார். மேலும் அவர் அந்தக் காட்சியில் நடிகர் நாகேஷ் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து முருகதாஸின் அடுத்த படம் என்ன என்பதையும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.