வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த பாண்டியராஜ்.. அப்படி என்னதான் சொல்லி இருப்பாரு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சமீபகாலமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட சூர்யா தற்போது பலருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று படத்தில் இவரது நடிப்பை பார்த்து பல பிரபலங்கள் மற்றும் உலக அளவில் உள்ள ரசிகர்கள் பலரும் சூர்யாவை புகழ்ந்து தள்ளினர்.

அதன்பிறகு இவர் யார் உடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் மெரினா மற்றும் பசங்க போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் அவருடன் கூட்டணி அமைத்தார். இவர்களது கூட்டணியில் முதன் முதலில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. அதனால் தொடர்ந்து படத்தில் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு பாண்டிராஜ் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

pandiraj
pandiraj

அதாவது அன்பான ரசிகர்களே கிட்டத்தட்ட 35 சதவீதம் படம் நிறைவடைந்துவிட்டது. படம் எடுத்த வரைக்கும் நன்றாக உள்ளது. மேலும் ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு நடக்கும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தங்களுடைய குழுக்கள் அனைவரும் படப்பிடிப்பு நடத்த ரெடியாக இருப்பதாகவும் விரைவில் கெத்தான டைட்டிலுடன் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.

இதனால் தற்போது சூர்யா ரசிகர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் அடுத்த அடுத்த அப்டேட்க்கு ரெடியாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Trending News