வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

‘எங்களையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள்’ – கதறிய துர்கா ஸ்டாலின்.. முதலமைச்சர் கூறிய பதில் என்ன தெரியுமா.?

கடந்து வந்த இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் அதிக அளவிற்கு அதாவது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக மக்கள் பெரும் அவதியில் இருந்தனர்.

குறிப்பாக சென்னை, கோவை, தர்மபுரி, ஈரோடு, மதுரை போன்ற பெரிய மாவட்டங்களில் தொற்று அதிகமாக காணப்பட்டது. தமிழக அரசு களத்தில் இறங்கி தனி கவனம் செலுத்தி வந்தது, மாவட்ட வாரியாக உதவிகளை செய்து வந்துள்ளது.

கடந்த 30-ம் தேதி ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணித்த ஸ்டாலின் கோவைக்கு சென்றார் அங்கு உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 புதிய ஆம்புலன்ஸ், ESI மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணிகள் மேற்கொண்டு அனைவரையும் சந்தித்தார்.

அதற்கும் ஒரு படி மேல் சென்று கொரோனா வார்டுகளுக்கு நான் போக வேண்டும் என்று கூற அங்கு இருந்த அரசு மருத்துவர்களுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம், உரிய பாதுகாப்புடன் ஸ்டாலினை கொரோனா வார்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அதுமட்டுமில்லாமல் சாதாரண பிபி கிட் மட்டும் தான் உள்ளது என்று அவர்கள் கூறுகையில் அது போதும் என்று ஸ்டாலின் போட்டுக்கொண்டு நோயாளிகளை சந்தித்தார். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால் அவர் குடும்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ‘எங்களையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள்’ என்று கதறி அழுதே விட்டாராம்.

mkstalin
mkstalin

அப்போது விளக்கமளித்த ஸ்டாலின் தங்களது உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு அவரது குடும்பங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கொரோனா வார்டுக்கு நான் சென்றேன் என்றும் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார் ஸ்டாலின். இப்படி ஒரு முதலமைச்சர் கிடைப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Trending News