வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கஷ்டத்தில் இருந்த 250 குடும்பங்களுக்கு உதவிய சூர்யா.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா.? குவியும் பாராட்டு!

கொரோனா காலகட்டத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.

இது ஒரு புறமிருக்க சினிமா பிரபலங்கள் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வேலையும் இல்லாமல் திண்டாடி வரும் 250 குடும்பகளுக்கு உதவி செய்துள்ளார்.

சூர்யாவின் நடிகர் சங்கத்தில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட பனிரெண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி உள்ளாராம்.

இந்த சம்பவத்தைக் கேட்ட சூர்யாவின் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். பல சினிமா பிரபலங்கள் சூர்யாவின் குடும்பத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி செய்து வரும் சூர்யாவின் குடும்பம், முதலமைச்சர் சந்தித்து நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

suriya-01
suriya-01

Trending News