வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மொட்டைத் தலையுடன் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிவசங்கர் பாபா புகைப்படம்.. பெரிய தில்லாலங்கடி இருப்பாரு போல!

பிஎஸ்பிபி பள்ளியில் அரைகுறை ஆடையில் ஆன்லைன் வகுப்பெடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சென்னையில் மட்டும் பல பள்ளிகளில் இதுபோன்ற புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பாலியல் புகாரில் சாமியார் சிவசங்கர் பாபா தேடப்பட்டு வந்தார், இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவிகளை அந்தரங்களை தொடுவது, முத்தமிடுவது என்று பல பா**யல் தொல்லை கொடுத்தவர் தான் சிவசங்கர் பாபா.

இவர் மீது பல புகார்கள் குவிந்ததால் சிபிசிஐடிக்கு இந்த விசாரணை மாற்றப்பட்டது. நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை நேரில் சென்று விசாரிக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.

அந்நிலையில் உடனடியாக தலைமறைவானார் சிவசங்கர் பாபா. டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்டிற்கு தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் வருவதை அறிந்து, டெல்லி தப்பிய போது காசியாபாத் பகுதியில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களில் சென்னைக்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடைபெறும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொட்டை தலையுடன் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிவசங்கர் பாபாவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

siva-shankar-baba
siva-shankar-baba

Trending News