வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அரசியல் வேறு! அரசாங்கம் வேறு! தெறிக்கவிடும் முதல்வர் ஸ்டாலின்

பாலிடிக்ஸ் தனியா இருக்கணும், கவர்ன்மெண்ட் தனியா இருக்கணும் என ரஜினி சொல்ல வந்த விஷயத்தையும், செய்ய நினைத்த காரியங்களையும் முதல்வர் முக ஸ்டாலின் சாமர்த்தியமாக செய்து கொண்டிருக்கிறார். ஒருகாலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை புகழ்ந்து வந்தோம் தற்பொழுது மற்ற மாநிலத்தவர்கள் முக ஸ்டாலினின் முயற்சிகளை பாராட்டி வருகிறார்கள்.

அரசியல்வாதிகள் எல்லாம் தங்களுடைய அரசாங்கம் அமைந்தவுடன் தங்களுக்கு வேண்டிய விஷயங்களை செய்து கொள்வார்கள் என்றுதான் மக்கள் நம்பி கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமான அரசியல் செய்து கொண்டிருக்கிறார் முக ஸ்டாலின்.

சில முக்கியமான அரசாங்க வேலைகளுக்கு அரசியல் சம்பந்தமே இல்லாத நபர்களை தேர்ந்தெடுத்து வேலை செய்கிறார் ஸ்டாலின். இறையன்பு முதல் தற்போது ரகுராம் ராஜன் வரை அந்தந்தத் துறையில் திறமையானவர்களை சரியான முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்  முதல்வர் முக ஸ்டாலின்.

பொருளாதார ஆலோசனைக் குழுவில் பல ஸ்டார்கள் வைத்து ஸ்டாலின் பிளான் போட்டுள்ளார். ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, பொருளாதார நிபுணர் ஜான் த்ரே, இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன் போன்ற திறமையானவர்களை வைத்து பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார் முக ஸ்டாலின்.

dmk-stalin
mk-stalin

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களை கூட ஏதேனும் ஒரு பொறுப்பில் நியமனம் செய்து இருக்கலாம் ஆனால் சகாயம் அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டார். இதனால் அவரும் அரசியல் சம்பந்தமாக வேலைகள் செய்ததால் அவருக்கான பொறுப்பை வழங்கவில்லை என்றும் கூறுகிறார்கள். எது எப்படியோ ரஜினி சொன்ன அந்த சிஸ்டம் மாறினாலே போதும்.

Trending News