லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் மாஸ்டர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.
இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார். கல்லூரி ஆசிரியை-யாக வலம் வருவார். எப்பொழுதும் போல் டாப் ஹீரோக்கள் படங்களில் ஹீரோயின்களை டம்மி பீஸ்சாக தான் வைத்திருப்பார்கள்.
அதே போல் தான் மாளவிகா மோகனன் இந்த படத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் மாளவிகா மோகனின் ஒரிஜினல் குரல் மாஸ்டர் படத்தில் இல்லையாம்.
பாண்டியன் ஸ்டோர் பிரபலமான தனம் இந்த படத்தில் மாளவிகா மோகனுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளாராம். இந்த செய்தியை அவரே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் உண்மையான பெயர் சுஜிதா.
இதைக் கேட்ட ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர் தனத்திற்கு இவ்வளவு திறமையா என்று பாராட்டி வருகின்றனர்.