தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைக்கழகம் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்றைய தலைமுறையினருக்கு அவரது நடிப்பைப் பார்த்தால் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போலத்தான் தெரியும்.
ஆனால் அன்றைய காலகட்டங்களில் அந்த கதாபாத்திரத்தை ஏற்று அப்படியே நடித்துக் கொடுத்த நடிகர்களில் மிக முக்கியமானவர். அப்படிப்பட்ட சிவாஜி எதார்த்தமான படங்களிலும் நடிக்க தவறவில்லை.
ஓவர் ஆக்டிங் செய்கிறார் எனக் கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவாஜி கணேசன் முதல் மரியாதை போன்ற எதார்த்த படங்களிலும் நடித்து, என்னால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டினார்.
அப்படிப்பட்ட சிவாஜி கணேசன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே இந்த படம் உருப்படாது, விளங்காது, கண்டிப்பா என் பெயரை கெடுத்து விடும் என சிவாஜி கூறிய படம் பின்னாளில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த கதை தெரியுமா.
சிவாஜியின் சினிமா கேரியரில் மறக்க முடியாத திரைப்படம் முதல் மரியாதை. அன்று வரை இருந்த சிவாஜி கணேசனை அப்படியே வேறு மாதிரி காட்டியிருந்தார் பாரதிராஜா. போதாக்குறைக்கு இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
இப்படி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாரதிராஜாவை, என்ன சீன் இது, எதுக்கு இதெல்லாம் வச்சிருக்க என திட்டி கொண்டே இருப்பாராம் சிவாஜி. அதே போல் ஒரு முறை இளையராஜாவை சந்தித்த போது, இந்த படம் கண்டிப்பாக உருப்படாது என ஓபன் ஆகவே சொல்லிவிட்டாராம்.
முதல் மரியாதை படத்தை ரிலீஸ் செய்வதில் சிவாஜிக்கு உடன்பாடு கிடையாதாம். ஆனால் படம் வெளியாகி படத்தில் உள்ள ஒவ்வொரு சின்னச் சின்ன காட்சிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு பாரதிராஜாவை கூப்பிட்டு சிவாஜி சமாதானம் பேசியதாகவும் ஒரு வரலாறு உண்டு.