தனுஷின் ஹாலிவுட் வளர்ச்சியை கண்டு மிரண்டு போன தெலுங்கு தயாரிப்பாளர்கள் தனுசை வைத்து மிகப்பெரிய பிளான் ஒன்றை போட்டுள்ளதாகவும், இதன் மூலமாக இனிவரும் காலங்களில் தனுஷ் தெலுங்கிலேயே தங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறுகின்றனர்.
தனுஷ் சமீபத்தில் தான் அமெரிக்காவில் நடைபெற்ற த கிரே மேன் என்ற படப்பிடிப்பை முடித்து விட்டு நேராக ஐதராபாத்துக்கு சென்று கார்த்திக் நரேன் இயக்கும் D43 படத்தில் நடிக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கிடையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் ஒரே நேரத்தில் தெலுங்கு இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அடுத்ததாக தனுஷை வைத்து நேரடியாக ஒரு ஹாலிவுட் படத்தை தயாரிக்க ஐடியா போட்டுள்ளார்களாம். தனுஷ் ஏற்கனவே பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் படம் நடித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மூன்று மொழிகளில் படம் நடிக்க தனுஷுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஹாலிவுட் பட ஆசையும் காட்டி விட்டதால் இனி தனுஷ் தமிழ் சினிமா பக்கம் வருவாரா என்பது சந்தேகம்தான்.

அப்படியே வந்தாலும் தேவையில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு வெற்றிமாறன் படங்களில் மட்டும் நடித்து விடலாம் எனவும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். அந்தளவுக்கு மை வைத்து வசியம் செய்து வைத்துள்ளார்களாம்.