ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இன்ஸ்டாகிராமில் வந்த ஆபாச மெசேஜ்… ரிவிட் அடித்த சனம் ஷெட்டி

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை சனம் ஷெட்டி. தமிழில் அம்புலி, மாயை, விலாசம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னரே பிரபலமானார். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தனது வாட்ஸ்அப் நம்பர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பி வருவதாக சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அடையாறு சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

sanam shetty
sanam shetty

மேலும் தனக்கு ஆபாச மெசேஜ் வந்த வாட்ஸ்அப் எண், இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளிட்ட பிற ஆதாரங்களையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News