எப்போவுமே தமிழ் சினிமாவுக்கு மலையாள நடிகைகளின் வரவு அதிகமாகவே இருக்கும். அதற்கு காரணம் தமிழ் ரசிகர்களுக்கு நம்ம ஊர் பெண்களைவிட கேரளா பெண்கள் மீது அப்படி ஒரு ஈர்ப்பு.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மலையாள வாசம் வீசி முன்னணி நடிகையானவர்கள் பலபேர் உள்ளனர். அந்த வகையில் 2000 முதல் 2010 வரை கவனிக்கத்தக்க முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த நடிகை.
அவருக்கு தற்போது 35 வயதாகிறது. சரியான நேரத்தில் சினிமாவை விட்டு விலகி ஒரு பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வடக்கே செட்டிலாகிவிட்டார். இவ்வளவு நாட்களாக குடும்பம் குட்டி என இருந்த அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து சென்று கொண்டுதான் இருந்தது.
ஆனால் திருமணம் ஆகிவிட்டதால் அந்த நடிகையை அண்ணி, அக்கா போன்ற வேடங்களில் நடிக்க வைக்கவே இயக்குனர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்களாம். தற்போது திருமணமாகி குழந்தை பெற்ற நடிகைகள் ரீ என்ட்ரி கொடுத்து வெற்றி பெற்று வருவதால் அவருக்கும் அந்த ஆசை வந்துவிட்டதாம்.
இதனால் சமீபத்தில் சில கதைகள் கேட்டுள்ளார். அதில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாநாயகி வேடம் என எதிர்பார்த்த நேரத்தில் முன்னணி ஹீரோவுக்கு அக்கா வேடத்தில் நடிக்க கேட்டார்கள்களாம்.
இதனால் கடுப்பான அந்த நடிகை, வயதுதான் 35 ஆனாலும் இன்னும் இளமை அப்படியேதான் இருக்கிறது. இனி நடித்தால் ஹீரோயின்தான், இந்த அக்கா தங்கச்சி வேஷம் எல்லாம் வேண்டாம் என்று இயக்குனர்களை விரட்டியடித்து வருகிறாராம் அந்த நாயகி.