பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் மனதில் “பட்டா” போட்டு அமர்ந்திருக்கும் படம் தான் “சார்பட்டா பரம்பரை”. இதில் குத்து சண்டையை மைய கருத்தாக அமைந்துள்ளது.
1975ஆம் ஆண்டுகளில் வடசென்னையில் சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என்று இரு குத்துச்சண்டை அணிகளுக்கு இடையே நடந்த நிகழ்வுகள் வெளிப்படுத்தி இருப்பதே சார்பட்டா பரம்பரை.
இத்திரைப்படம் வெளியானது முதல் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது என்றே கூறவேண்டும்.
அந்த வகையில் “டான்சிங் ரோஸ்” கதாபாத்திரம் மிகவும் பாராட்டை பெற்றுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் ஷபீர் அவர்கள் நடித்துள்ளார். நடிகர் ஷபீர் ஆயுத எழுத்து, பேட்ட, டெடி, அடங்கமறு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் சார்பட்டா மூலமாக ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டையும் புகழை பெற்றுள்ளதாக அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் ஷபீர் அவர்கள் இயக்குனர் பா .ரஞ்சித் நடிப்பதற்கு மிகுந்த சுதந்திரம் கொடுத்ததாகவும் “டான்சிங் ரோஸ்” என்பது ஒரு ஆங்கிலோ இந்தியன் பெயராகும்.
இத்திரைப்படத்தில் அந்த கதாபாத்திரம் டான்ஸ் ஆடிக் கொண்டே சண்டை போடுவதாக அமைந்திருக்கும். அதனால் அந்த ரோலுக்கு பா .ரஞ்சித் அவர்கள் டான்சிங் ரோஸ் என்று பெயர் வைத்தார்.
நடிகர் ஷபீர்க்கு டான்ஸ் ஆட தெரியும் என்பதால், அவர் ஏற்கனவே காலடி குத்து வரிசையும் தெரியும் என்பதாலும், அவருக்கு பாக்ஸிங் கஷ்டமாக இல்லை. ஆனால் குத்துசண்டை காட்சிகளில் தோன்றும் ஒவ்வொரு அடியும் உண்மையாகவே அடுத்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இத்திரைப்படத்தின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றிதான் ரசிகர்களின் பாராட்டு.