சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

சார்பட்டா, இடியாப்ப பரம்பரைக்கு டிக்கெட் வசூலிக்கும் நாகேஷ்..1970-ல் நடைபெற்ற குத்து சண்டை!

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் OTT-யில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அனைத்து விதமான இடங்களிலும் நல்ல ஒரு தரமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்தப் படம் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையே நடக்கும் பாக்ஸிங் தொடர்பான கதை. 1970களில் கதை நடப்பது போல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் சார்பட்டா பரம்பரை படம் பற்றி தான் பேசுகிறார்கள்.

இந்நிலையில் 1970-களில் வெளியான படம் ஒன்றில் பழம்பெரும் நடிகர் நாகேஷ், சார்பட்டா பரம்பரை பற்றி பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. தெருவில் இரண்டு பெண்கள் சண்டையிடும் போது வர்ணனையாளராக மாறிய நாகேஷ், ஒருவர் சார்பட்டா பரம்பரை, மற்றொருவர் இடியாப்ப பரம்பரை என கூறுகிறார்.

அந்த வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

nagesh-video
nagesh-video

அதுமட்டுமின்றி சண்டையை பார்க்கும் மக்களிடம், இந்தச் சண்டையை உட்கார்ந்து பார்க்க 10 பைசா எனவும் நின்று கொண்டே பார்ப்பதற்கு 5 பைசா எனவும் தியேட்டர் உரிமையாளர் போல டிக்கெட் வசூலிக்கிறார். இந்த காட்சியை இப்பொழுது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

Trending News