தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே வெளியில் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் இருவருக்கும் யார் பெரியவர்கள்? என்ற கர்வம் இருந்து கொண்டுதான் இருக்கிறதாம்.
இதை பல பிரபலங்களும் நிறைய பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். தனுஷ் படங்களை விட ஆரம்பத்தில் சிம்புவின் படங்களே அதிகம் வரவேற்பு பெற்றது தெரிந்த ஒன்றுதான். ஆனால் சிம்பு தன்னுடைய சோம்பேறித்தனத்தால் இருந்த மார்க்கெட்டையும் இழந்து தற்போது தடுமாறி கொண்டிருக்கிறார்.
ஆனால் தனுஷுக்கு வெற்றிமாறன் என்று பொக்கிஷம் கிடைக்க அதை வைத்து தற்போது இந்திய சினிமாவில் பிரபலமாகி விட்டார். சிம்புவுக்காக தயார் செய்யப்பட்ட வடசென்னை படத்தை தானே தயாரித்து நடித்து மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் தனுஷ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படிக் கிடைத்த வாய்ப்புகளை மிஸ் செய்த சிம்பு தற்போது மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் சிம்புவை வைத்து செல்வராகவன் கான் என்ற படத்தை இயக்க ஆசைப்பட்டார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட வெளியாகி இணையத்தை கலக்கிய நிலையில் திடீரென அந்த படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி கைவிடப்பட்டதாக செய்திகள் வந்தன.
ஆனால் அதில் உண்மையில்லையாம். தற்போது இழந்த மார்க்கெட்டை மீட்க போராடும் சிம்புவுக்கு செல்வராகவன் உதவி செய்வதாக நினைத்துக் கொண்ட தனுஷ், செல்வராகவனிடம், சிம்புவை மேலே தூக்கி விட்டால் என்னுடைய கதி என்ன ஆவது? உடனே கான் படத்தை நிறுத்தி விடு என கோபப்பட்டதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. கான் படம் கைவிடப்பட்டது இதுதான் உண்மை காரணம் எனவும், பைனான்ஸ் பிரச்சனை எதுவும் இல்லை எனவும் கூறுகின்றனர்.